News July 26, 2024

நாளை மருத்துவ முகாம்

image

கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் நாளை (ஜூலை.27) முதல் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. வி.எஸ்.கே நகர், லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் ஜூலை 27, 29, 30, 31 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

கோவையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

மதுரையை சேர்ந்த முத்து சங்கையா(26), கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது டூவீலரில் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் தடுமாறி கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கியது. உயிரிழந்தார். சிங்காநல்லூர் கிழக்கு போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவர் இளங்கோ மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 11, 2026

கோவை நகர் முழுவதும் போலீஸ் அணிவகுப்பு

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று காவல்துறையினர் (ம) அதிவிரைவுப் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக விரோத செயல்களை தடுக்கவும் உதவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2026

மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. ​துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

error: Content is protected !!