News July 26, 2024
ரூ. 14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களை வருமானவரித் துறையினர் இன்று முடக்கினார்கள். முடக்கிய சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 14.21 கோடி ஆகும். இதனால் அரசியல் சுற்று வட்டாரங்களில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
விழுப்புரம்: வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 27, 2025
விழுப்புரம்: விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கு 42வயதிற்கு உட்பட்ட +2 தேர்ச்சி முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் https://villupuram.nic.in பதிவிறக்கம் செய்து 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
News August 27, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆகஸ்ட்-29ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.