News July 26, 2024
பருப்பு வகைகளை அரசு கொள்முதல் செய்யும்

விவசாயிகளிடம் அனைத்து துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்யும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், இ சம்ரிதி தளத்தில், விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், காங்., ஆட்சியுடன் ஒப்பிடும்போது, விவசாயிகளிடம் தாங்கள் அதிக பொருட்களை கொள்முதல் செய்வதாகக் கூறினார்.
Similar News
News December 3, 2025
இண்டியா கூட்டணியில் இருந்து விலகலா?

பிஹார் சீட் ஷேரிங்கில் நடந்த பிரச்னையால் IND கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த JMM நிர்வாகி குணால் சாரங், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால்தான் பாஜக புரளிகளை கிளப்பிவிடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் JMM எப்போதும் பாஜகவுக்கு அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.
News December 3, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கு ஹேப்பி நியூஸ்

சென்னை போன்ற பெருநகரங்களில் அட்வான்ஸ் தொகையை கேட்டாலே கிறுகிறுக்கும். இந்நிலையில், வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி இனி 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தாலே போதுமானது. அதேபோல், குடியேறிய 12 மாதங்களுக்கு பிறகே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், அதனை 30 நாள்களுக்குள் உரிமையாளர் சரி செய்து கொடுக்க வேண்டும். இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.


