News July 26, 2024

அமைச்சரிடம் மனு அளித்த திருநெல்வேலி எம்பி

image

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் இன்று ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்தார். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு ரயில் சேவைகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

திருநெல்வேலி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

திருநெல்வேலி மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 5, 2026

நெல்லை: துணை முதல்வர் இன்று வருகை

image

நெல்லை மாவட்டம், பாளை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை 4.30 மணிக்கு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News March 5, 2026

நெல்லை: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

image

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த மாரியப்பன்(19) என்பவர் புகழேந்தி தெருவில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 220 கிராம் எடை உள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!