News July 26, 2024

மனைவி வெட்டிக் கொலை: கணவன் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஓம்பிரகாஷ், கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த முன்விரோதத்தில் மனைவி சந்தியாவை, மாமியார் வீட்டில் வைத்து கத்தியால் வெட்டி இன்று கொலை செய்துள்ளார். கொலை செய்த ஓம்பிரகாஷை கைது செய்த பானாவரம் போலீசார், சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் பயங்கர விபத்து!

image

வி.சி மோட்டூர் பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலையில் இன்று(மார்ச் 4) கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இக்பால் ஆகிய 4 பேர் மயங்கி விழுந்தனர்.
​பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 4, 2026

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.58,514 சம்பளம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடைபெறவுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ராணிப்பேட்டை நேரிலோ அல்லது ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!