News July 26, 2024

நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு நிதி உதவி

image

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன்  குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் மூன்று லட்சத்திற்கான காசோலை கலெக்டர் சரயு இன்று வழங்கினார். அப்போது பருகூர் எம்எல்ஏ உடனிருந்தார்.

Similar News

News March 5, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

கிருஷ்ணகிரியில் ஒரு குட்டி இங்கிலாந்து

image

ஓசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தளி. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள தளி முற்றிலும் பல்வேறு மலை வாசஸ்தலங்களால் சூழப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையை நினைவூட்டும் ஒரு சிறந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது. எனவே இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க மக்களே!

News March 4, 2026

கிருஷ்ணகிரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. கிருஷ்ணகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04343-225069 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!