News July 26, 2024
அக்னிபாத் விவகாரம்: பிரதமர் VS காங்கிரஸ்

கார்கில் வெற்றி ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராணுவம் புத்துயிர் பெறவும், வீரர்கள் போருக்கு எப்போதும் தயாராக இருக்கவும் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்., எம்.பி கார்த்தி சிதம்பரம், இத்திட்டம் போதிய பயிற்சியும், பலன்களும் இல்லாத குறுகிய கால திட்டம் என்றும், ராணுவத்திற்கு விரிவான பயிற்சியும், முழு அர்ப்பணிப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
மதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு மாறிய முக்கிய நிர்வாகிகள்

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், மதிமுக கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 18 பேர் அதிமுகவில் இணைந்தனர். கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கைலாசம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 16, 2026
ராசி பலன்கள் (16.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 16, 2026
சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்

தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் கட்சியினரிடையே உரையாடிய அவர், விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தான் CM முகம் என்ற நிலைப்பாட்டில் தவெகவினர் உறுதியாக இருப்பதால், தவெக – NDA கூட்டணிப் பேச்சு நடத்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


