News July 26, 2024
மல்லிகைப் பூ ஒரு கிலோ ₹600

இன்று ஆடி வெள்ளிக் கிழமை என்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆடி மாதம் திருமணம் போன்ற முக்கிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறாத சூழலில், கோயில், வீடுகளில் பூஜை செய்வதற்காக இன்று அதிகளவில் பூக்கள் விற்பனையாகின. இதனால் நேற்று கிலோ ₹200க்கு விற்பனையான மல்லிகை இன்று ₹600ஆக உயர்ந்தது. இதேபோல, முல்லை, கனகாம்பரம், பிச்சிப் பூ, அரளி, ரோஸ் போன்றவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News March 13, 2026
டிரம்ப்பை மோசமாக விமர்சித்த கலிபோர்னியா கவர்னர்

ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணை வாங்க சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கிறோம் என்று டிரம்ப் கூறியிருந்தார். ரஷ்யாவிடம் இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதால் ரஷ்யா பெருமளவில் லாபம் ஈட்டும். இதனை கலிபோர்னியா கவர்னர், ‘டிரம்ப் அனுமதி வழங்கவில்லை; மாறாக அவர்தான் புடின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
News March 13, 2026
அதிமுகவை MGR தொடங்கவில்லையா..!

1972-ல் புதிதாக கட்சி தொடங்க நினைத்த MGR, அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்திருந்த அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார். சாதாரண ஒரு தொண்டனாகவே தன்னை இக்கட்சியில் இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். அதிமுக என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1976-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். தற்போது MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவரின் கட்சியில் <<19370263>>சசிகலா<<>> இணைந்துள்ளார்.
News March 13, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 பைசா சரிந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு ₹92.45 என்ற நிலைக்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். அதேபோல், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதும் சரிவை அதிகரித்துள்ளது.


