News July 26, 2024
அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சி: மோடி

இந்திய ராணுவத்தை போருக்கு தயார் நிலையில் எப்போதும் துடிப்புடனும், இளமையாகவும் வைத்திருப்பது தான் அக்னிபாத் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இதுவரை ₹1.25 லட்சம் கோடிக்கு மேல் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
தினமும் பீர் குடிப்பவரா நீங்கள்?

மது அளவாகத்தான் குடிப்பேன் என சொல்பவர்களுக்கு கூட உடலில் சிறு பிரச்னைகள் வரும். பீர் அடித்தால் எந்த பிரச்னையும் வராது என கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் தினமும் 2 பீர் குடித்தால் மூளை 10 ஆண்டுகள் முதிர்ச்சியடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல், துரித உணவுகளும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. பீர் குடிக்கும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க?
News March 6, 2026
பேச்சுவார்த்தைக்கே இடமில்லை சரணடையுங்கள்: டிரம்ப்

ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும், அதனை மீண்டும் உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்களும் எங்களது கூட்டாளிகளும் சேர்ந்து ஈரானை பொருளாதாரத்தில் முன்பை விட வலிமையான நாடாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் & அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் 7-வது நாளை கடந்துள்ளது.
News March 6, 2026
நடிகர் அஜித்துக்கு என்னாச்சு.. போட்டோ வெளியானது

போர்ச்சூழல் காரணமாக துபாயில் இருந்து நாடு திரும்ப முடியாமல்<<19271023>> அஜித்<<>> தவித்து வருகிறார். துபாயில் அஜித் பாதுகாப்பாக உள்ளார் என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக அஜித்தின் எந்த போட்டோவும் வெளிவரவில்லை. இந்நிலையில், துபாயில் ரசிகருடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது. ‘பத்திரமாக நாடு திரும்புங்க AK’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


