News July 26, 2024
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு கோவை 4 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் சிறையில் இருந்த நிலையில் அவரது வழக்கறிஞர் ஜாமின் மனுவை விண்ணப்பித்திருந்தார். இதனை ஏற்ற கோவை நீதிமன்ற நீதிபதி பல்வேறு நடவடிக்கைகளை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
Similar News
News March 7, 2026
கோவையில் வானதி சீனிவாசன்: தொகுதி மாற்றமா?

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், 2026 சட்ட மன்ற தேர்தலில் கோவை வடக்கு தொகுதிக்கு மாற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கட்சியின் ஆணிவேரான தெற்கு தொகுதியைக் கைவிடுவது பின்னடைவை ஏற்படுத்தும் என இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தொகுதி குறித்து கட்சித் தலைமையே இறுதி முடிவு எடுக்கும் என வானதி விளக்கமளித்துள்ளார்.
News March 7, 2026
கோவையை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவ.2 ஆம் தேதி நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டனர். கோவையை உலுக்கிய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நீதிபதி – சுந்தர் ராஜன்.
அரசு தரப்பு வக்கீல் – பி. ஜிஷா.
எதிர் தரப்பு வக்கீல் – சசிகுமார்.
News March 7, 2026
BREAKING: வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு

கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெள்ளிங்கிரி 1-வது மலை செல்லும் வழியில் முதியவர் ஒருவர் சுய நினைவின்றி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் டோலிக்கட்டி அவரை தூக்கி வந்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் பல்லடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது.


