News July 26, 2024
Alert: 2 மாவட்டங்களுக்கு கனமழை

கோவை, நீலகிரியில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-வடக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 22, 2026
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இழுபறி ஏன்?

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி முடிந்தபாடில்லை. ஆளுக்கு 15 சீட் பிரிச்சுக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறதாம். ஆனால், ஆளுக்கு 14 சீட் பிரித்துக்கொண்டு, மீதியை விசிக & CPI-க்கு கொடுக்கலாம் என திமுக சொல்கிறதாம். இதை ஏற்க மறுக்கும் காங்., இங்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எங்களுக்கு உங்களைவிட ஒரு சீட்டாவது அதிகமாக வேண்டாமா என மல்லுக்கட்டுவது தான் இழுபறிக்கு காரணமாம்.
News March 22, 2026
தோனியின் கடைசி IPL இதுதான்: ராபின் உத்தப்பா

இந்தாண்டு IPL தொடரில் தோனி ஆலோசகராகவும் வீரராகவும் அணியில் செயல்படுவார் என CSK Ex வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடர்தான் CSK அணிக்காக மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடும் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது; வெளியேறப்போகிறோம் என்பதை உணர்ந்து, அணியிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக்கொள்ள அவர் விரும்புவார் எனவும் கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News March 22, 2026
இந்தியாவின் வீர மகன் மறைந்தார்.. கண்ணீர் அஞ்சலி

எல்லைப் பணியில் இருந்த ஒரு ராணுவ வீரனை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் பணியாற்றிய ராணுவ வீரர் நாயக் திலக் சிங் அண்மையில் மரணமடைந்தார். இதனையறிந்து, உ.பி.,யில் உள்ள அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. தேசியக் கொடி போர்த்திய நாயக்கின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் கடலில் ஆழ்ந்தனர். தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் அந்த மக்கள் நாயகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


