News July 26, 2024
சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிகள் விலகல்

சவுக்கு சங்கர் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். பெண் போலீசாரை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, வழக்கிலிருந்து நீதிபதிகள் ரமேஷ், சுந்தர் மோகன் விலகியுள்ளனர்.
Similar News
News March 3, 2026
சென்னை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 3, 2026
காங்கிரஸ் கட்சியில் பிளவா? 13 MLA-க்கள் போர்க்கொடி

40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் திமுகவோ 29 தொகுதிகளை கொடுக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்., பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, 13 MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 1 ரூபாய் வரை விலை குறைந்து ₹4.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. உங்க ஏரியாவில் 1 முட்டையின் விலை எவ்வளவு?


