News July 26, 2024
மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைவில் புதிய டீன்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘டீனாக’ இருந்த ரத்தினவேலு 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். லோக்சபா தேர்தல் நடத்தை விதியின் காரணமாக,புதிய டீன் நியமிக்கப்படவில்லை. தற்காலிக டீனாக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒன்றரை மாதமாகியும் புதிய ‘டீன்’ நியமிக்கப்படாத நிலையில் விரைவில் டீன் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 30, 2025
மதுரையில் இன்று அநேக இடங்களில் மின்தடை

மதுரையில் இன்று (ஆக.30) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணாநகர், ஹவுசிங் போர்டு பகுதிகள், மானகிரி, காந்தி மியூசியம், கலெக்டர் அலுவலகம், மடீட்சியா, மதிச்சியம், GH, கோரிப்பாளையம், செல்லூர், தல்லாகுளம், தமுக்கம், யானைக்கல், குலமங்கலம்,அரவிந்த் ஹாஸ்பிடல்,லேக் ஏரியா,தொழிற்பேட்டை ஏரியா,அழகர் கோயில் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் காலை 9-5 மணி வரை மின்தடை.
News August 29, 2025
மதுரை: தீபாவளி சிறப்பு ரயில்கள் விவரம்

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு எட்டு ரயில்களின் சேவையை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முன்பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
மதுரை மாநகராட்சி மின் மயானத்தில் புதிய கட்டணம் நிர்ணயம்

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மூலக்கரை மற்றும் தத்தனேரி ஆகிய பகுதியில் மின் மற்றும் எரிவாயு மூலம் தகனம் செய்யும்போது நவீன எரிவாயு தகன மேடையினை பயன்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான 3,450 ரூபாய் மட்டும் பொதுமக்களிடம் தகன மேடையில் வைத்து எரியூட்டும் தொகை மற்றும் புதைப்பு கட்டணமாகவும் நிர்ணயித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் என அறிவிப்பு.