News July 26, 2024
விரைந்து சீரமைக்க ஆட்சியா் உத்தரவு

கந்தா்வகோட்டை ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறைகளை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆட்சியா் மு. அருணா நேற்று உத்தரவிட்டாா். தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பல்வேறு அலுவலகங்கள், அரசு நலத் திட்டங்கள், திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை தொடா்பாக ஆய்வு செய்தார்.
Similar News
News August 20, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேச்சுப்போட்டி

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக்கான பேச்சுப் போட்டிகள் புதுகை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆக 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்குபெற மாணவர் பங்கேற்பு படிவத்தில் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரின் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
புதுக்கோட்டை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
புதுக்கோட்டை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460352>>(பாகம்-2<<>>)