News July 26, 2024

சேலத்தில் இதற்கெல்லாம் அனுமதி இல்லை

image

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கைகளில் கொடி, பேனர்கள், உருவப்படங்களை எடுத்துச் செல்ல கூடாது. சங்ககிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை போன்ற பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆர்.டி.ஓ.லோகநாயகி தெரிவித்துள்ளார்.

Similar News

News July 5, 2025

கிராம நத்தம் பட்டா இனி ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்

image

கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<> https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டங்களில், இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வழியாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை! SHAREit

News July 5, 2025

சேலம்: நத்தம் பட்டா மாறுதல்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மேற்கு,தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர். ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க.<<16949292>>தொடர்ச்சி <<>>!

News July 5, 2025

பெரும்பகுதி காவிரி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார்

image

கர்நாடகாவில் பிறக்கும் காவிரி ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது. காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது.இந்தநிலையில் வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!