News July 26, 2024
பொங்கலுக்கு ‘SK23’ ரிலீஸ்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘SK23’ படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையில் ஏற்கெனவே 2 பாடல்கள், முக்கிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து நவம்பரில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது ALERT

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அரசின் TN Fact Check தெரிவித்துள்ளது. தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ம் தேதி முடிவடையும் என்று ECI அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும், இந்த தவறான தகவலை நம்ப வேண்டாமெனவும் TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.
News March 7, 2026
என் கணவருக்கு நன்றி.. லதா ரஜினிகாந்த்!

மனைவிக்கு கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு வீட்டில் கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. எனது கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். எனது முயற்சிகள் அனைத்தையும் என்னுடைய கணவருக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
News March 7, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

தேர்தலையொட்டி சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. தேர்தல் தேதியை அறிவிக்க சில நாள்களே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் PR சிவசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று EPS-ஐ இன்று சந்தித்தார். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக சிவசாமி அறிவித்தார்.


