News July 26, 2024
மேலும் 42 மாணவர்கள் தமிழகம் வருகை

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு தங்கி படிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். கடந்த 3 நாள்களில் 166 மாணவர்கள் தமிழகம் திரும்பிய நிலையில், நேற்று மேலும் 42 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து தமிழக அரசின் உதவியால் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.
Similar News
News March 7, 2026
கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?
News March 7, 2026
OPS என்றால் விசுவாசம்: CM ஸ்டாலின்

எப்போதும் அன்போடும், அமைதியோடும் சிரித்த முகத்துடன் இருப்பவர்தான் OPS என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், OPS என்றால் ஞாபகத்துக்கு வரும் ஒரே சொல் விசுவாசம், ஆனால் துரோகத்தின் அடையாளமாக இருக்கக்கூடியவர் EPS என சாடியுள்ளார். தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் EPS எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
News March 7, 2026
ஸ்டாலின் TAX.. நேரடியாக அட்டாக் செய்த விஜய்

நிதி சார்ந்த பல <<19322121>>வாக்குறுதிகளை<<>> விஜய் வெளியிட்டார். அப்போது, ஸ்டாலினால் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என கேட்கிறீர்களா எனக் கேட்டு அதற்கு பதிலும் அளித்தார். அதில், பட்ஜெட் நிதியில் 20% ஸ்டாலினுக்கு செல்வதாகவும், 10% அமைச்சர்களுக்கு செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசுக்குத்தான் வரி கொடுப்போம்; அரசே ஒருவருக்கு வரி கொடுப்பதை ஸ்டாலின் TAX என்று தானே சொல்ல வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.


