News July 26, 2024
பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

காரைக்காலில் ஸ்மார்ட் மேத்ஸ் கேமிஃபைட் அபாகஸ் கல்வி நிறுவனம் சார்பில் 36 இளம் மாணவர்களை கொண்டு வெறும் 10 நிமிடங்களில் ஓர் இலக்க மூன்று வரிசை கொண்ட 3600 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் மூலம் தீர்த்து புதிய சாதனையை படைத்துள்ளனர். இதனை அடுத்து இன்று அம்மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News March 5, 2026
புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கும் விழா

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலைரங்கத்தில், இன்று புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினர்.
News March 5, 2026
BREAKING காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை பள்ளிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
புதுச்சேரி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

புதுச்சேரி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <


