News July 26, 2024

அன்னாசியின் ஆச்சரியம் தரும் பலன்கள்

image

அன்னாசி பித்த கோளாறுகளை விரைந்து குணமாக்கும் அருமருந்தாக விளங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அன்னாசியில் வைட்டமின் சி சத்து செறிந்துள்ளது. மேலும், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், இதனை தினமும் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Similar News

News December 2, 2025

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சமீபமாக பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி ஏர்போர்ட்டிற்கு வந்த இமெயிலில், விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக விமானம் மும்பை ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.

News December 2, 2025

செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்..

image

பல முன்னாள் அமைச்சர்களும், அனுபவமுள்ள தலைவர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தையை நடத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. டிச.15-ல் ஓபிஎஸ் முக்கிய முடிவை எடுக்கவிருப்பதால், அதுவரை பொறுத்திருங்கள் என்று செங்கோட்டையனிடம் வெல்லமண்டி பதிலளித்துள்ளாராம்.

News December 2, 2025

கொட்டும் கனமழை.. விமான சேவை ரத்து

image

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் இருந்து அகமதாபாத், அந்தமான், மும்பை செல்லக்கூடிய பல விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!