News July 25, 2024

தூங்கும் முன்பு நிச்சயம் இதை செய்ய வேண்டும்

image

இரவில் தூங்கச் செல்லும் முன் பல் துலக்குவது கட்டாயம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பகல் நேரத்தில் உண்ணும் உணவுகள் அனைத்தும் பற்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால் இரவில் பல் துலக்காமல் தூங்கும்போது பல் சொத்தை ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனை தவிர்க்க இரவில் ஒரு முறையும் காலையில் ஒரு முறையும் பற்களை துலக்கினால் பற்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்கும்.

Similar News

News March 21, 2026

வரலாற்றில் இன்று

image

➤ உலக காடுகள் தினம் ➤1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது. ➤1945 – பிரிட்டன் விமானங்கள் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர். ➤1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது. ➤2006 – டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடகம் தொடங்கப்பட்டது.

News March 21, 2026

குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும்: ECI

image

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் அதன் விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதற்காக ECI வரையறுத்துள்ள படிவங்களின்படி உறுதிமொழியினை, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 2 நாள்களில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். வாக்குப்பதிவு முடிவதற்கு 2 நாள் முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாள்களில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News March 21, 2026

Fatty Liver வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

image

வயதானவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகளைக் கூட பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே இந்நோய் உங்களுக்கு வராமல் இருக்க, நோயில் இருந்து விடுபட நிபுணர்கள் கூறும் உணவுகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. பிறருக்கு இதை தவறாமல் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!