News July 25, 2024
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பேரிடர் தணிப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, ₹810 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களின் வெள்ள மேலாண்மைக்கு ₹2,514 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
விஜய்யை பாஜக முடித்துவிடும்: கொங்கு ஈஸ்வரன்

நிதிஷ்குமாரைப் போல இந்த தேர்தலில் EPS-ஐயும், அடுத்த தேர்தலில் விஜய்யையும் பாஜக காலிசெய்துவிடும் என நினைத்ததாக ஈஸ்வரன் கூறியுள்ளார். NDA-ல் விஜய்யை இணைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்களை பற்றி பேசிய அவர், போகிற போக்கை பார்த்தால் வரும் தேர்தலிலேயே விஜய்யையும் பாஜக முடித்துவிடும் என தெரிகிறது என்றார். மேலும், இது மட்டும் நடந்தால் TN-ல் பாஜக காலூன்ற இவர்கள் உதவுவது தெரிந்துவிடும் என பேசியுள்ளார்.
News March 11, 2026
OPS ஆதரவாளர்கள் ஒன்றாக அதிமுகவில் இணைந்தனர்

OPS-ன் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் தீவிர ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரை அதிமுகவில் இணைக்க EPS தரப்பு திட்டமிட்டுள்ளது. OPS, திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
News March 11, 2026
காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


