News July 25, 2024

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி

image

கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 4, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

News March 4, 2026

நாமக்கல்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (04-03-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.128- ஆகவும், பண்ணை கோழி விலை ரூ.62- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30- ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!