News July 25, 2024

வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.

Similar News

News March 10, 2026

பெரம்பலூர்: பாமகவினர் தீவிர பிரச்சாரம்

image

பெரம்பலூர் மாவட்டம், ‎குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ‎மணப்பத்தூர், படைவெட்டிக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் பாமக ஒன்றிய செயலாளர் தனவேல் ஏற்பாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழக மக்களுக்கு, திமுகவினர் பொய் வாக்குறுதிகள் வழங்கியதாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசூரம் மூலம் தெரிவித்து, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

News March 10, 2026

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கடலூரில் கைது!

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த ஒகலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (42). இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட திட்டக்குடி போலீசார், தகவலறிந்து கருப்பையாவை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

News March 10, 2026

பெரம்பலூர்: பழங்கால வெங்கல சிலை கண்டெடுப்பு!

image

பெரம்பலூர் மாவட்டம், மருதையான் கோயில் பகுதியில் குடியிருந்து வருபவர் பாலச்சந்தர் (38). இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு அங்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது, வெங்கல உலோகத்தாலான இரண்டு அடி உயரம் உள்ள பழங்கால பெருமாள் சிலை, பூஜை செய்யும் மணி மற்றும் தீபம் ஏற்றும் விளக்கும் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வருவாய்த் துறையினர் சிலையை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!