News July 25, 2024
ஒரே நாளில் ₹6,060 கோடி ஈட்டிய அதானி

கடந்த 23ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கு பின்னான ஒரே நாளில், அதானியின் சொத்து மதிப்பு ₹6,060 கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவரது சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்த போதிலும், அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதேவேளையில், அம்பானியின் நிறுவனம் ₹9,200 கோடி இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2026
பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு தடை எப்போது?

பல திரைப்பட பாடல்களின் இரட்டை அர்த்த வரிகள் புரியாமல் மாணவர்கள் ஆண்டு விழாக்களில் டான்ஸ் ஆடுவது வழக்கமாகவே உள்ளது. இதனை மேற்கோள் காட்டி, ப்ளூ சட்டை மாறன் தற்போது எழுப்பியுள்ள கேள்வி, விவாதப் பொருளாக மாறியுள்ளது. <<19416052>>விஜய் <<>>பாடல்களை மட்டும் பள்ளிகளில் தடை செய்தால் போதுமா? பள்ளி வளாகத்தினுள் அனைத்து சினிமா பாடல்களையும் தடை செய்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News March 18, 2026
Chef – Cook.. இருவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

பலரும் இந்த இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் என நினைக்கிறோம். ஆனால் Chef- Cook இருவருக்கும் வித்தியாசம் உள்ளது *Chef என்பவர் சமையலறையின் மேலாளர். புதிய உணவுகளை உருவாக்குதல், மெனுவை வடிவமைத்தல், சமையலறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார் *Cook என்பவர் சமையல்காரர். செஃப் வகுத்த உணவு செய்முறைகளை பின்பற்றி சமையல் & அது தொடர்பான வேலைகளை செய்து முடிப்பவர்.
News March 18, 2026
தேர்தல்களில் CPI கடந்து வந்த பாதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPI, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. *1989-13(அதிமுக+), *1991-10(திமுக+), *1996-13(திமுக+), *2001-8(அதிமுக+), *2006-10(திமுக+), *2011-11(அதிமுக+), *2016-25(மக்கள் நலக்கூட்டணி), *2021-6(திமுக+), *2026-5(திமுக+). இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?


