News July 25, 2024
சேலத்தில் அலுவலர்களுக்கான பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி குறியீடுகளை விரைந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலர்களுக்கான பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் மஜ்ரா கொல்லப்பட்டியில் உள்ள மாவட்ட வள மையக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News July 5, 2025
சேலத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது

சேலம், சீரங்கபாளையம் அருகே ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இதில், 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்தப் பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பினர். மேலும், புரோக்கர்களாகச் செயல்பட்ட விஜி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News July 5, 2025
சேலத்தில் கடன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறவிண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் செய்யும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வழங்குவதாகவும், மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.
News July 4, 2025
சேலம்: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் 0427 245 0241. ஷேர் பண்ணுங்க !