News July 25, 2024
மேயர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏனைய நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, பல்வேறு புகார்கள் எழுந்ததால், திமுக மேயர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமிக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி NDA-வில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதில் பாஜக, NR காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறியில் நீடிக்கிறது. இதனிடையே CM ரங்கசாமி தலைமையிலான நடந்த அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு ரங்சாமி சென்றுள்ளார்.
News March 19, 2026
ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு: ஈரான்

தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சூளுரைத்துள்ளார். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள் எதிரிகளின் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவதாகவும், இதற்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 19, 2026
வரலாற்றில் இன்று

➤1944 – ஜெர்மனியின் நாஜிப் படை ஹங்கேரியைக் கைப்பற்றியது.
➤1972 – இந்தியா – வங்காளதேசம் இடையே 25 ஆண்டு கால அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் டாக்காவில் கையெழுத்தானது.
➤1998 இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார்.
➤2003 ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின.
➤2008 நடிகர் ரகுவரன் மறைந்த நாள்.


