News July 25, 2024
2026 தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்

திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் ஆவடியில் இன்று (ஜூலை25) தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போகிறது என்றும், மின் கட்டணம் உயர்வதோடு மின்தடையும் ஏற்படுகிறது என்றார். மேலும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
Similar News
News September 7, 2025
ஆவடியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்

ஆவடி மாநகராட்சி, ப்ளூ க்ராஸ் ஆப் இந்தியா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, நாய்களுக்கு இலவச தடுப்பூசி & மருத்துவ முகாமை இன்று (செப்.,7) நடத்துகிறது. இந்த முகாமானது திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு மண்டல வரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்க இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
News September 7, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று (செப்.,7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
பூந்தமல்லியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏ.வி.எல் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.6) நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.