News July 25, 2024

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வேலை வாய்ப்பு

image

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஜூலை 27ஆம் தேதி 108 வாகனத்தில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மருத்துவ உதவியாளருக்கு பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஒட்டுனர் பணிக்கு 24 வயதிலிருந்து 35 வயது வரை இருக்க வேண்டும். மேலும் ஒட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். இதற்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 8, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு – காவல்துறை விளக்கம்

image

மதுரை சோலை அழகுபுரத்தில், கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு என்று இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், காவல்துறை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. சொத்துத் தகராறில் கார்த்திக் மற்றும் அவரது மாமா நாகரத்தினம் என்பவருக்கும் இடையே நடந்த பிரச்சினையில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

மதுரை: CM அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் அதிரடி உத்தரவு போட்டுள்ளார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை ஒன்-டூ-ஒன் என்ற தலைப்பில் முதல்வர் சந்தித்து வருகிறார்.

error: Content is protected !!