News July 25, 2024

இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ்கார்ட்னில் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில், தொடக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தடுமாறினர். இருப்பினும், கடைசியில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி 1,983 புள்ளிகளுடன் 4ஆம் இடம் பிடித்துள்ளது.

Similar News

News March 24, 2026

JUST IN புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் வருகிற ஏப்.06-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதனை ஈடு செய்யும் விதமாக ஏப்.18-ம் தேதி வேலை நாளாக இயங்கும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், விடுமுறையால், தேர்தல் பணிகள் முடங்காது என்றும் அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SHARE IT.!

News March 24, 2026

72 hour-க்கு முன் கேன்சல் செய்தால் தான் காசு கிடைக்கும்!

image

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான விதிகளில் IRCTC மாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் கட்டணம் திருப்பி தரப்படாது; 8-24 மணி நேரத்துக்குள் கேன்சல் செய்தால் 50% பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே இனி முழு கட்டணமும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ₹2,720 குறைந்த நிலையில் மாலை ₹2,000 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1 கிராம் தங்கம் ₹12,750-க்கும், 1 சவரன் ₹1,06,000-க்கும் விற்பனையாகிறது. போர் நிறுத்த அறிவிப்பால் நேற்று ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை மாலையில் உயர்ந்தது. பின்னர் இன்று காலை குறைந்த நிலையில், மீண்டும் உயர்ந்ததால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!