News July 25, 2024
செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கை உடனே விசாரிக்கவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
Similar News
News March 28, 2026
வில் அம்புடன் காட்சி தரும் முருகன்.. அதிசய கோயில்!

முருகன் என்றாலே, வேலுடன் காட்சி தருவார்.. இதுவே நினைவுக்கு வரும். ஆனால், கைகளில் வேலுடன், வில் அம்பை ஏந்தியபடி இருக்கும் முருகனை திருவையாறு ஐயாறப்பர் கோயில் காணலாம். 4 கைகளுடன் வேல், வில் & அம்பு தாங்கி, தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். சிவபெருமான் வழங்கிய கண்டாமணியை வலது காலில் அணிந்து போர் வீரத்தை குறிக்கும் வகையில் முருகன் அருள்பாலிக்கிறார்.
News March 28, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் $110 உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $1.94 உயர்ந்து $69.77-க்கு வர்த்தகமாகிறது. இதன் எதிரொலியால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 28, 2026
தவெகவை மறைமுகமாக தாக்கிய EPS

தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ள EPS திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நேற்று தவெகவையும் தாக்கியுள்ளார். இன்னொரு கட்சி இருக்காங்க என்று ஆரம்பித்த அவர், இறந்தவர்கள் குடும்பத்தினரை பனையூர் வரவழைத்து அனுதாபம் கூறியதாகவும்; இதை கொடுமை என்றும் குறிப்பிட்டார். தேர்தல் பரப்புரையில் விஜய்யை EPS மறைமுகமாக சீண்டியது தேர்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. <<-se>>#TNELECTION2026<<>>


