News July 25, 2024
திருச்சியில் போலி பாஸ்போர்ட்: ஒருவர் கைது

திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா சென்று வந்தவரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் இன்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த அறிவழகன் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமி கிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <
News March 3, 2026
திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருச்சி மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


