News July 25, 2024
33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோட்டகுப்பம், விழுப்புரம், சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்பட 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் அம்பேத்கர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 27, 2025
விழுப்புரம்: விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு பதவிகளுக்கு 42வயதிற்கு உட்பட்ட +2 தேர்ச்சி முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் https://villupuram.nic.in பதிவிறக்கம் செய்து 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
News August 27, 2025
விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆகஸ்ட்-29ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.
News August 27, 2025
விழுப்புரம்: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த<