News July 25, 2024
கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஜூலை 26) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு வேலைவாய்ப்பு
முகாமில் பிரபல தனியார் நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய
உள்ளனர்.இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News September 9, 2025
கிருஷ்ணகிரி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

கிருஷ்ணகிரி மக்களே மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 9, 2025
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் அதிகபட்ச மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, போச்சம்பள்ளியில் 31.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்தங்கரையில் 9.4 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், அஞ்செட்டி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, நெடுங்கல், பெண்ண கொண்டாபுரம், ராயக்கோட்டை, சூளகிரி, தளி, சின்னார் அணை, கெலவரப்பள்ளி அணை, கே.ஆர்.பி. அணை மற்றும் பாம்பார் அணை , ஆகிய பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை.
News September 9, 2025
கிருஷ்ணகிரி: ஜாக்டோ-ஜியோ போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று (செப்.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2003, ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.