News July 25, 2024
அதிமுக செயலாளரின் மாமனார் மறைவுக்கு பழனிசாமி இரங்கல்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் மாமனார் சுந்தரம், வயது மூப்பு காரணமாக நேற்று மாலை 7 மணி அளவில் காலமானார். அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அன்னாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் ராஜேந்திரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நேற்று (மார்ச்-08) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
செங்கை: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டு மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News March 8, 2026
ரூ.10,000 ECR கடற்கரையில் திருமணம்

தமிழக சுற்றுலாத்துறை ECR-ல் ‘பீச் வெட்டிங்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள TTDC கடற்கரை விடுதியில் திருமணம் நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இடத்திற்கான முன்பதிவு கட்டணம் பராமரிப்புக்காக சுமார் ரூ.10,000 செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவு மற்றும் மேலும் கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


