News July 25, 2024
அகழாய்வில் சோழர் கால பொருள் கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று வரும் அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அகழாய்வில் செம்பினால் அரிய அஞ்சனகோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மருங்கூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
Similar News
News March 10, 2026
பால் பாக்கெட் மூலம் தேர்தல் விழிப்புணர்வு; ஆட்சியர்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்த பொதுமக்கள் கூடும் இடங்களில் கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணி, மாரத்தான் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சடித்து விநியோகிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 10, 2026
கடலூர்: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 300 மாணவர்கள் ஆப்சென்ட்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 30 ஆயிரத்து 83 மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், மொத்தமாக 300 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில் 29 ஆயிரத்து 783 மாணவர்கள் மட்டும் தேர்வெழுதினர்.


