News July 25, 2024
மத்திய அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை இன்று மாலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். காவிரி பிரச்னை குறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு ஜூலை 31 வரை தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த அளவிலான நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
Similar News
News August 6, 2025
உடலுக்கும் உண்டு கால அட்டவணை

*3-5 AM-மூச்சுப் பயிற்சி, தியானம் *5-7 AM-காலைக் கடன்களை கழிக்கும் நேரம் *7-9 AM-சாப்பிடும் நேரம் *9-11 AM- செரிமான நேரம் (சாப்பிடுதல் கூடாது) *11AM-1PM: இதய நோயாளிகள் கவனமாக இருக்கும் நேரம் *1-3 PM-மிதமான சிற்றுண்டி *3-5 PM-நீர்க்கழிவுகளை வெளியேற்றும் நேரம் *5-7 PM-தியானம், இறை வழிபாடு *7-9 PM- இரவு உணவு நேரம் *9-11 PM-அமைதியாக உறங்கலாம் *11PM -1AM-அவசியம் உறங்கவும் *1-3 AM-கட்டாயம் உறங்கவும்.
News August 6, 2025
ஒரு நாட்டையே உருவாக்கிய இளைஞர்!

400 பேரைக் கொண்ட குட்டி நாடு ஒன்றை உருவாக்கி, அதற்கு தன்னை தானே அதிபர் என்று அறிவித்துள்ளார் 20 வயது இளைஞர் டேனியல் ஜாக்சன். குரோஷியா – செர்பியா இடையே யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் நிலத்தை தான், ‘ரிபப்ளிக் ஆஃப் வெர்டிஸ்’ என்ற நாடாக அறிவித்துள்ளார் இந்த ஆஸ்திரேலிய இளைஞர். அதோடு கொடி, நாணயத்தையும் அறிவித்து ‘யாரு சாமி இவன்’ என நெட்டிசன்களை கூற வைத்துள்ளார்.
News August 6, 2025
BREAKING: எம்எல்ஏ தோட்டத்தில் SI கொடூரமாக கொலை

மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர், SI-ஐ விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ், குற்றவாளிகளை தேடி வருகிறது.