News July 25, 2024
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதற்கட்ட சேர்க்கை நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக ஜூலை 31ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காலத்தில் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.750 மற்றும் விலையில்லா பாடப்புத்தகம், வரைபடகருவி, சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, மூடுகாலணி (ஷூ) ஆகியவை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியாகி உள்ளது. பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதியில் மாவட்ட பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News September 8, 2025
கிருஷ்ணகிரியில் புதிய நிர்வாகிகள் நியமனம்

இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் சேவைக்காக பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட தலைவர் V.S. கவியரசு வாழ்த்துத் தெரிவித்தார்.
News September 8, 2025
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

செப்டம்பர் 11 காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் ஓசூர் வரும் முதல்வர் ஸ்டாலின், 12 pm விஸ்வநாதபுரம் எல்கார்ட் பகுதியில் புதிய தொழில் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 2 pm ஓசூர் எம்எல்ஏ இல்லத்தில் மதிய உணவு, 4 pm தளி சாலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், 5.30 pm குருபரப்பள்ளி டெல்டா யூனிட் துவக்கி வைத்து, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே ரோடு ஷோ நடத்தி, பர்கூர் எம்எல்ஏ இல்லத்தில் இரவு தங்குகிறார்.