News July 25, 2024
சேலம் ரயில் வழித்தடம் குறித்து எம்.பி. கோரிக்கை

சேலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ரயில் வழித்தட வேலி அமைக்கப்பட வேண்டும் என திமுக எம்.பி செல்வகணபதி வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அவசரமாக செல்ல வேண்டுமெனில் நீண்ட தூரம் சுற்றி போகும் நிலை உள்ளது. மக்களை நாம் மதிக்க வேண்டும். அரசு என்பது மக்களுக்காக தான். அதனால், எல்லா இடங்களிலும் வேலிகள் அமைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Similar News
News March 11, 2026
சேலம் தவெக மாவட்ட செயலாளர் அழைப்பு

தவெக சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் நடமாட்டம், உள்ளிட்டவற்றை கண்டு கொள்ளாத, தமிழக அரசை கண்டித்து வரும் வியாழக்கிழமை, சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், இதில் தவெகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.
News March 10, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 10, 2026
சேலம்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

சேலம் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..


