News July 25, 2024
நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதியையொட்டி ஜூலை 26 முதல் 28 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை தி.மலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், ஜூலை 27ல் 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
Similar News
News August 5, 2025
திமுக ஆட்சிக்கு பிரேமலதா கொடுத்த மார்க் இதுதான்!

நிறை குறைகள் சரிசமமாக உள்ளதால் திமுக ஆட்சிக்கு 50 மார்க் தரலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என கூறிய அவர், ஆணவப்படுகொலைகள், லாக் அப் மரண சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். சட்டம் – ஒழுங்கை கையில் வைத்திருக்கும் CM ஸ்டாலின் இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
News August 5, 2025
பரோட்டா சாப்பிடுவதால் மரணம் ஏற்படுமா? FACTCHECK

செய்திகளில் வருவது போல், பரோட்டாவால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், பரோட்டாவால் வயிறு உப்புதல், மலச்சிக்கல், வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இதில் மாவுச்சத்து அதிகம் என்பதால் கலோரியும் அதிகம். பரோட்டாவை அவசரமாக உண்ணுவதாலும், அதிகம் வாயில் திணிப்பதாலும் மூச்சுத்திணறி சிலர் இறந்துள்ளனர். ஆகவே, மெதுவாக, மென்று ருசித்து சாப்பிடுவது நல்லது.
News August 5, 2025
கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் அருகே கோயில் ஒன்றில் ஆடிமாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கு பாத்திரம் ஒன்றில் சூடாக ரசம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த 2 வயது குழந்தை எதிர்பாராத விதமாக அதனுள் விழுந்ததில் உடல் முழுவதும் வெந்து உயிரிழந்துள்ளது. குழந்தைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இச்சம்பவம் உணர்த்துகிறது.