News July 25, 2024
திருப்பூரில் 41 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்போர், தயாரிப்போர் என நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 41 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
திருப்பூர்: வங்கியில் வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 8, 2025
வெள்ளகோவில்: விஜயகாந்த் நிலம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈரோடு(கி) தொகுதி MLA சந்திரகுமார். இவர், 2005ல் தேமுதிக-வில் இருந்தார். அப்போது, விஜயகாந்த் ஏழை மக்களுக்கு வழங்கும் வகையில், வெள்ளகோவில் அருகே 3ஏக்கர் நிலம் வாங்கினார். அப்போது சந்திரகுமார் மீது அந்த நிலம் கிரயம் செய்யப்பட்டது. 2016ல் சந்திரகுமார் திமுகவுக்கு மாறினார். இந்நிலம் குறித்து தேமுதிக சார்பில் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நிலத்தை திரும்ப வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
News November 8, 2025
திருப்பூர்: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

திருப்பூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!


