News July 25, 2024
தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் சில மாதங்களாக கிடைக்காததைக் கண்டித்தும், இப்போராட்டம் நடைபெறுகிறது. அத்துடன், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
Similar News
News March 11, 2026
ஏழுமலையான் பக்தர்களுக்கு TTD-ன் முக்கிய அறிவிப்பு!

ப்ரீ & ₹300 தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன லைனில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என TTD தெரிவித்துள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16-ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளதாம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.
News March 11, 2026
சீன நிறுவனங்களின் முதலீடு.. விதிகளை தளர்த்திய இந்தியா

அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளை மத்திய அரசு திருத்தி அமைக்க உள்ளது. கல்வான் மோதலுக்கு பின் சீனா உள்பட எல்லை நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது மத்திய அரசு அந்த விதிகளை தளர்த்தினால் இனி அந்த நாடுகளிலிருந்து முதலீடுகள் எளிதாக வரும். இது வர்த்தக உறவுகளை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.
News March 11, 2026
ராசி பலன்கள் (11.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


