News July 25, 2024
நொய்டாவை அலறவிட்ட ‘பக்கோடா’ கும்பல்

டெல்லியை அடுத்த நொய்டாவில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை உ.பி.யை சேர்ந்த திருட்டு கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தம் வராதபடி அதிநவீன கருவிகளைக் கொண்டு பூட்டை உடைத்த மர்ம கும்பல் 24 மணி நேரத்தில் 6 வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர். இதனிடையே, திருடர்களுக்கு பசி எடுத்ததால், ஒரு வீட்டில் பக்கோடா செய்து சாப்பிட்டு, மிச்சத்தை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.
Similar News
News March 15, 2026
டெல்லியில் விஜய்யை சந்தித்தாரா த்ரிஷா?

கரூர் வழக்கு தொடர்பாக ஆஜராக விஜய் நேற்று டெல்லி சென்றார். அதற்கு முந்தைய நாளே மும்பை சென்ற த்ரிஷா, சில RSS, BJP பிரமுகர்களைச் சந்தித்து தவெக கூட்டணி தொடர்பாக பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு நேற்று டெல்லி சென்ற த்ரிஷா, விஜய்யிடம் கூட்டணி தகவலை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
News March 15, 2026
வெள்ளி விலை இந்த வாரம் ₹10,000 குறைந்தது!

வெள்ளி விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார இறுதியில் கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2,80,000 ஆக உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் உள்ளிட்ட காரணங்களால் மார்ச் முதல் வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளியின் விலை, சர்வதேச சந்தையிலும் 6% குறைந்து 1 அவுன்ஸ் 80 டாலராக உள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்.
News March 15, 2026
விஜய்யை திசைதிருப்ப திமுக திட்டமா?

<<19382831>>லயோலாவின் IPDS<<>> நடத்திய கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் மத்தியில் திமுகவை, தவெக விஞ்சிவிட்டதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம், அரசியல் களம் மட்டுமின்றி SM-ல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA-வுடன் விஜய் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை திசைதிருப்பி தனித்து களம் காணும் ஆசையை மேம்படுத்தவே ‘இந்த திணிப்பை’ திமுக திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


