News July 25, 2024
தமிழ்நாட்டுக்கு செய்தது நியாயமா?

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது நியாயமா என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பிஹார் மாநிலம் வெறும் ₹1,900 கோடி தான் GST காட்டுகிறது. ஆனால், தமிழ்நாடு ₹20,000 கோடி GST காட்டுகிறது. வெறும் 26 எம்பிக்களை கொண்ட பிஹாருக்கு ₹1 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு எதுவுமே இல்லை” என கூறியுள்ளார்.
Similar News
News March 18, 2026
தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக மழை பெய்வதையும் பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றூம் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News March 18, 2026
நடிகைகளுக்கு குடும்பம் இருக்கும்: இயக்குநர் அமீர்

நடிகை நயன் தாரா குறித்து <<19407643>>C.V. சண்முகம் <<>>பேசியது சர்ச்சையான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அரசியல் மேடைகளில் அவர்களைப் பற்றி தவறாக பேச வேண்டாம் எனவும், நாகரிக அரசியலை பழகுங்கள் அரசியல்வாதிகளே எனவும் இயக்குநர் அமீர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 18, 2026
வாரிசு அரசியலுக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி: R.B.உதயகுமார்

மன்னராட்சியின் சிந்தனையில் இருக்கிற திமுக ஆட்சிக்கு நாம் முடிவுரை எழுத வேண்டும் என R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு இன்றைக்கு முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்படுதை மக்கள் உன்னிப்பாக கவனிப்பதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 இருக்கும் எனவும் கூறியுள்ளார். திமுகவில் வாரிசுகள் மட்டுமே அதிகார மையங்களாக உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


