News July 25, 2024

காஞ்சிபுரம் எம்எல்ஏ வுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை

image

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், சென்னை அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

Similar News

News March 4, 2026

காஞ்சிபுரத்தில் 14 பவுன் நகைக் கொள்ளை!

image

படப்பை, ஆரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(39). இவர், மறைமலைநகர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது, சில மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 4, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மார்.03) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

காஞ்சிபுரம்: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!