News July 25, 2024
சென்னை – பெங்களூரு சாலை பயன்பாட்டுக்கு வருகிறது?

சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை பணிகள் நீண்ட நாள்களாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தற்போது வரை 62% பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறிய அவர், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார். இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னை – பெங்களூரு இடையேயான பயண தூரம் வெகுவாகக் குறையும் என கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களை தங்களுடன் இணைப்பதில் அதிமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்தவகையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் சேலத்தில் உள்ள EPS இல்லத்தில், அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பொன்னாடை போர்த்தி அவர்களை அதிமுகவுக்கு வரவேற்ற EPS, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
News March 6, 2026
TRB ரேட்டிங்கை நிறுத்திய மத்திய அரசு

ஈரான் போர் நடைபெற்று வரும் சூழலில் சில டிவி சேனல்கள், பரபரப்புக்காக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களிடையே பீதி ஏற்படுவதை தவிர்க்க, டிவி சேனல்களுக்கான வாராந்தர TRP ரேட்டிங் வெளியீட்டை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழிகள் மற்றும் வணிக செய்தி சேனல்களுக்கும் பொருந்தும்.
News March 6, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 (சனி) வேலைநாளாகும். இதேபோல், பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு மார்ச் 10 உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.


