News July 25, 2024
2026ல் மடிக்கக்கூடிய ஆப்பிள் போன்கள்?

பல ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ள. இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்களின் தகவல்களின் படி, மடிக்கக்கூடிய ஐபோன்கள் 2026 க்குள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. அவை Samsung Galaxy Z ஃபிளிப்பைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 4, 2026
பங்குச்சந்தை சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,723 புள்ளிகள் சரிந்து 78,521 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 476 புள்ளிகள் சரிந்து 24,600 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News March 4, 2026
விஜய்யின் மேடை பேச்சு வெறும் பெர்ஃபாமன்ஸ்: ரவிக்குமார் MP

விஜய்க்கு அரசியல் களத்திற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என ரவிக்குமார் MP விமர்சித்துள்ளார். மேலும், மேடையில் அவர் பேசுவதெல்லாம் வெறும் பெர்ஃபாமன்ஸ் என்றும், ஆனால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் அவரை பின் தொடர்வது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தவெக படுதோல்வியை சந்தித்த பின், விஜய்யின் மாயை விலகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,120 குறைந்து ₹1,21,600-க்கும், கிராமுக்கு ₹265 குறைந்து ₹15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


