News July 25, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ புதிய ரேஷன் அட்டை விநியோகம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் – தமிழக அரசு
➤ “தமிழ் புதல்வன்” திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் – தமிழக அரசு
➤ பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும் – அன்புமணி
➤ வங்கி வைப்பு (FD) தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது HDFC வங்கி
➤ பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமின்
Similar News
News March 13, 2026
Gas charge ₹30.. அலறவிடும் சென்னை ஹோட்டல்ஸ்

வணிக சிலிண்டர் விலை உயர்வு & தட்டுப்பாட்டால் பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ‘Gas Charge’ என்று தனியாக ₹9.50 பில்லில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலும் சில ஹோட்டல்களில் ₹30 கேஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில உணவகங்களில் ₹5 – ₹10 வரை உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
News March 13, 2026
பஸ் சேவைகள், ரயில் உணவுகளில் தட்டுப்பாடா?

பெட்ரோல், டீசல் & கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அரசு பஸ் சேவைகளில் பாதிப்பு, ரயில்களில் உணவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், இவை வதந்தியே என்று TNSTC & IRCTC விளக்கம் அளித்துள்ளன. போதிய டீசல் இருப்பு உள்ளதால் பேருந்து சேவைகளில் பாதிப்பில்லை என்று TNSTC தெரிவித்துள்ளது. அதேபோல், வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களிலும் உணவு தடையின்றி வழங்கப்படுவதாக IRCTC கூறியுள்ளது.
News March 13, 2026
BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்.. இதுவே முதல்முறை

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஜெ.வீரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


