News July 24, 2024

IPL: பஞ்சாப் பயிற்சியாளருக்கு குட்பை?

image

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸின் 2 ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. அதனால், அவருக்கு பதில் இந்திய முன்னாள் வீரர்கள் சேவாக், யுவராஜ், சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என அந்த அணி திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் DC பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2026

அதிமுக வேட்பாளர் மயக்கம்.. ஹாஸ்பிடலில் அனுமதி!

image

திருவிடைமருதூர் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் திடீரென மயங்கி விழுந்ததால் ஆடுதுறையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வண்ணக்குடி பகுதியில் பிரசாரம் செய்தபோது மயங்கி விழுந்த அவரை கட்சி நிர்வாகிகள் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 9, 2026

தமிழ் நடிகை தற்கொலை.. பரபரப்பு தகவல்

image

சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. FIR-ல் உள்ள அவரது பெயருக்கும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் முரண்பாடு உள்ளதாம். இச்சிக்கலை களைய, சுபாஷினியின் குடும்பத்தார் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 9, 2026

3 மாநில தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

image

நண்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 49.70% மற்றும் அசாமில் 59.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வாக்குச்சாவடிகளில் போதுமான பந்தல் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!