News July 24, 2024

TNPL: 189 ரன்களை குவித்தது திருப்பூர்

image

டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணி வெற்றி பெற திருப்பூர் அணி 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 189 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 50, ரஹேஜா 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். நெல்லை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 190 ரன்கள் இலக்கை நோக்கி நெல்லை அணி விளையாடி வருகிறது.

Similar News

News March 21, 2026

சேப்பாக்கத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

image

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள IPL ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ROAR 26 என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுடன் அவர் பங்கேற்க உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி SK ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்க விஜய்யின் தவெக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் கடந்த மார்ச் 16-ம் தேதி முடிந்த நிலையில், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை விஜய் நாளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான மார்ச் 23-ம் தேதி, தவெக வேட்பாளர்கள் அனைவரும் தங்களது மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

error: Content is protected !!