News July 24, 2024
மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மக்களுடன் முதல்வர்” என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் 11.07.2024 முதல் 08.08.2024 வரை 46 இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. நாளை அரவக்குறிச்சி வட்டாரத்திற்குட்பட்ட வேலம்பாடி , இனங்கனுார் , சாந்தப்பாடி மற்றும் பல ஊராட்சிகளில் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன் பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
கரூரில் தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

வேலாயுதம்பாளையம் செம்பாடாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்லி அன்பரசி (47), வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.
News March 3, 2026
கரூரில் 175 பேர் ஆப்சென்ட் – கலெக்டர் ஆய்வு!

கரூர் மாவட்டத்தில் 47 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. புனித தெரசா பள்ளியில் கலெக்டர் ரவிகுமார் ஆய்வு செய்தார். மொத்தம் 10,351 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,174 பேர் தேர்வு எழுதினர். 99 மாணவர்கள், 59 மாணவியர் மற்றும் 17 தனித்தேர்வர்கள் என மொத்தம் 175 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வுப் பணியில் 630 ஆசிரியர்கள், 110 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். .
News March 3, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச் 2) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக உட்கோட்ட அலுவலரை குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.


